தெய்வ சிலைகளில் இடம்பெறுகின்ற உயிரினங்களில் கிளியும் ஒன்றாகும். மான், நாகம் போன்றவை தவிற அரிதாக சில உயிரினங்களே தெய்வ சிலைகளில் இடம்பெறுகின்றன.
மதுரை மீனாட்சியிடம் உள்ள கிளியானது பக்தர்களின் வேண்டுதல்களை மீண்டும் மீண்டும் மீனாட்சிக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்குமாம். அம்மை மீனாட்சியாக இருக்கும் போதும், காமாட்சியாக இருக்கும் போது கிளியை வைத்துக் கொண்டிருக்கிறாள்.

துவக்கம்

மீனாட்சியம்மன்

காமாட்சியம்மன்

பார்ப்பதற்கே கொடூர வடிவில் இருக்கும் ஆயுதம் கட்வங்கம். பெரும்பாலும் சிவ வடிவமான பைரவர் இந்த ஆயுதத்துடன் உள்ளார். வட இந்தியாவில் வடிவமைக்கப்படும் பைரவ சிலைகளுள் இந்த ஆயுதம் உள்ளது.

மண்டைஓடு எனும் கபாலமும், எலும்பு தண்டும் கொண்டு உள்ள இந்த கட்வங்கத்தில் பாம்பும் உள்ளது. பெரும்பாலும் கபாலத்தின் கண் ஓட்டையுள் இந்த பாம்பானது ஊர்ந்து செல்வதைப் போல உள்ளது.

விக்கிப்பீடியாவில் தனித்துவமாக இதற்கென கட்டுரை எழுதினேன். பார்ப்பவர்களுக்கு சிலைகளின் கையில் இருக்கும் இந்த ஆயுதம் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். தனியாக விக்கிப்பீடியாவில் இணைக்க இதனை வண்ண ஓவியமாக வரைய இறைவன் உத்தரவிட்டான். இதோ.. கட்வங்க ஆயுதம் வண்ண டிஜிட்டல் ஓவியமாக உள்ளது.

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்துக் கொண்டிருப்பதால், படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள் பற்றியும் சற்று அறிந்திருக்கிறேன்.

அதன்காரணமாக இப் படைப்பினை Attribution-NonCommercial-NoDerivs 2.5 India (CC BY-NC-ND 2.5 IN) என்ற உரிமத்தின் கீழ் பகிர்ந்துள்ளேன். இதன் மூலம் இப் படைப்பினை தரவிறக்கவும், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் அனைவருக்கும் உரிமை கிட்டும். உடன் வர்த்தக நோக்கமற்றவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளவும் இயலும். அப்போது எனது பெயரினையும், இத்தொடுப்பினையும் அவர்கள் குறிப்பிட்டால் மட்டும் போதுமானது.

Drawings by Jegadeeswaran Natarajan is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.Based on a work at www.flickr.com/photos/sagotharan_1/.



கட்வங்கம் தாங்கிய பைரவ சிலைகள் -